தமிழ்நாடு தின விழா கொண்டாட்டம்


தமிழ்நாடு தின விழா கொண்டாட்டம்
x

செங்கோட்டை அரசு பள்ளியில் தமிழ்நாடு தின விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை மேலூர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் ராமையா தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ராஜன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் வேல்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனா். ஆசிரியர் மாலீஸ்வரி வரவேற்றார். அதனை தொடா்ந்து நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டிய முன்னாள் தமிழக முதல்வா் பேரறிஞர் அண்ணா உருவப்படத்திற்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

விழாவில் செங்கோட்டை நகர்மன்ற 12-வது வார்டு உறுப்பினா் இசக்கித்துரை பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார். ஆசிரியர் கருப்பசாமிநாதன் சிறப்புரை ஆற்றினார். முடிவில் ஆசிரியர் ஜோசப் ராஜசிங் நன்றி கூறினார்.


Next Story