கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் தமிழ் கனவு நிகழ்ச்சி


கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் தமிழ் கனவு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 24 Sep 2023 6:45 PM GMT (Updated: 24 Sep 2023 6:46 PM GMT)

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் தமிழ் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் தமிழ் இணைய கல்விக் கழகம் சார்பில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் (கூடுதல் பொறுப்பு) சுரேஷ், மருத்துவ கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கவிஞர் அறிவுமதி கலந்து கொண்டு தமிழ் கனவுகள் குறித்து பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன் தமிழ் பண்பாடு குறித்து பேசினார். தொடர்நது மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி குறிப்பேடு, தமிழ் பெருமிதம் குறித்த குறிப்பேடு வழங்கப்பட்டன. மேலும் தமிழ்ப்பெருமிதம் சிற்றேட்டில் உள்ள துணுக்குகள் குறித்து சிறப்பாக விளக்கம் அளித்த மாணவர்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக தமிழக அரசின் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி அலுவலகம், தாட்கோ அலுவலகம், உயர் கல்வி வாய்ப்புகள், வங்கிக்கடன், சுய உதவி குழுக்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் நான் முதல்வன் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை மாணவர்கள் பார்வையிட்டனர். இதில் கல்லூரி பேராசிரியர்கள், அரசு அலுவலர்கள், பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story