தல்லாகுளம் கோவில் தெப்ப திருவிழா- தண்ணீர் இல்லாததால் குளக்கரையை வலம் வந்த பெருமாள்


தல்லாகுளம் கோவில் தெப்ப திருவிழா- தண்ணீர் இல்லாததால் குளக்கரையை வலம் வந்த பெருமாள்
x

தல்லாகுளம் பெருமாள் கோவில் தெப்ப திருவிழா நடந்தது. அப்போது குளத்தில் தண்ணீர் இல்லாததால் கரையை சுற்றி சுவாமி வலம் வந்தார்.

மதுரை

அழகர்கோவில்,


தல்லாகுளம் பெருமாள் கோவில் தெப்ப திருவிழா நடந்தது. அப்போது குளத்தில் தண்ணீர் இல்லாததால் கரையை சுற்றி சுவாமி வலம் வந்தார்.

பெருமாள் கோவில்

மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலின் உப ேகாவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலாகும். இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் புரட்டாசி மாதம் வரும் பிரம்மோற்சவ விழா தனி பெருமை உடையது. இந்த திருவிழாவானது கடந்த 17-ந் தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரவு அன்ன வாகனத்தில் பெருமாள் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து தினமும் காலையில் கிருஷ்ணாவதாரம், ராமாவதாரம், கஜேந்திர மோட்சம், ராஜாங்க சேவை, காளிங்க நர்த்தனம், சேஷசயனம், வெண்ணை தாழி, திருத்தேர், திருமுக்குளத்தில் தீர்த்தவாரியும் நடந்தது. தினமும் மாலையில் சிம்மம், அனுமார், கருடன், சேஷ, யானை, புஷ்பம், குதிரை, பூப்பல்லக்கு போன்ற வாகனங்களிலும் பெருமாள் எழுந்தருளி புறப்பாடு நடைபெற்றது.

தெப்ப உற்சவம்

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தெப்ப உற்சவம் நேற்று காலை நடந்தது. இதில் காலை 10.45 மணிக்கு மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் பல்லக்கில் தேவியர்களுடன் பெருமாள் எழுந்தருளி தெப்பக்குளத்தை சுற்றி வலம் வந்து மேற்கு பகுதியில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.தல்லாகுளம் தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லை. இந்த காரணத்தால் சுவாமி தெப்பம் சுற்றவில்லை. தெப்பக்குளக்கரையிலேயே சுவாமி சகல பரிவாரங்களுடன் காலையிலும், மாலையிலும் சேர்த்து 3 முறை சுற்றி வலம் வந்தார். மாலையில் வண்ண விளக்குளால் தெப்பம் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இன்று உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெற்றது.

திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.


Next Story