கட்டுமான தொழிலில் ஈடுபடும் வெளிமாநில தொழிலாளர்கள் கணக்கெடுப்பு-நலவாரிய தலைவர் தகவல்


கட்டுமான தொழிலில் ஈடுபடும் வெளிமாநில தொழிலாளர்கள் கணக்கெடுப்பு-நலவாரிய தலைவர் தகவல்
x

கட்டுமான தொழிலில் ஈடுபடும் வெளிமாநில தொழிலாளர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக நலவாரிய தலைவர் தெரிவித்தார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அவர்கள் பாதுகாப்பாக பணியாற்றி வருகிறார்கள். கட்டுமான தொழிலில் ஈடுபடும் வடமாநில தொழிலாளர்களை கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்வதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. மேலும் அவர்களுக்கு தமிழக தொழிலாளர்களுக்கு வழங்குவதை போல் அடையாள அட்டையும் வழங்குகிறோம். அவர்களுக்கும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது. வாரியத்தின் மூலம் கட்டுமான தொழிலில் எவ்வளவு வெளிமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்ற புள்ளிவிவரங்களை கணக்கெடுக்க தொடங்கி உள்ளோம். அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கக்கூடிய ஒரு அரசாக தமிழக அரசு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story