மயிலாடுதுறை அரசு பள்ளியில் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை


மயிலாடுதுறை அரசு பள்ளியில் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
x

மாணவர்களிடையே போதை பழக்கம் அதிகரிப்பதாக வந்த தகவலின் பேரில் மயிலாடுதுறை அரசு பள்ளியில் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தினார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை;

மாணவர்களிடையே போதை பழக்கம் அதிகரிப்பதாக வந்த தகவலின் பேரில் மயிலாடுதுறை அரசு பள்ளியில் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தினார்.

போதை பழக்கம்

மயிலாடுதுறையில் பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு பூங்காக்கள் மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புறங்கள், பாழடைந்த மண்டபங்களில் சுற்றித்திரிவதாகவும் சிலர் கஞ்சா போதைக்கும் அடிமையாவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மயிலாடுதுறையில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்கள் பலர் வகுப்புகளை புறக்கணித்து விட்டு பூங்காவில் சுற்றித்திரிந்தனர். உடனே பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியர் மோட்டார் சைக்கிளில் பூங்காவுக்கு சென்று மாணவர்களை விரட்டி பிடித்து பள்ளிக்கு கொண்டு சென்றனர்.

போலீஸ் விசாரணை

இந்தநிலையில் மயிலாடுதுறையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் போலீஸ் சூப்பிரண்டு மீனா விசாரணை மேற்கொண்டார். அப்போது உதவி தலைமை ஆசிரியரிடம், மாணவர்களின் நடவடிக்கைகள் குறித்தும், குற்றச்சாட்டு குறித்தும் விசாரணை மேற்கொண்டார். மேலும் மாணவர்களை ஒழுங்காக கண்காணிக்க வேண்டும். மாணவர்கள் மீது பெற்றோர்கள் உரிய கவனம் செலுத்த வேண்டும். பூங்காக்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் தினமும் ரோந்து பணியில் ஈடுபட்டு பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைக்க வேண்டும். மாணவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்தினால் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.


Next Story