பெற்றோர் மோட்டார் சைக்கிள் வாங்கி தராததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


பெற்றோர் மோட்டார் சைக்கிள் வாங்கி தராததால்  வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x

பெற்றோர் மோட்டார் சைக்கிள் வாங்கி தராததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்தியில் பெற்றோர் மோட்டார் சைக்கிள் வாங்கி தராததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மோட்டார் சைக்கிள்

பரமத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மகன் தானேஷ்வரன் (வயது 20). இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தானேஷ்வரன் தந்தையிடம் தனக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவரது தந்தை தற்போது வாங்க முடியாத சூழ்நிலை உள்ளதால் பிறகு வாங்கி தருவதாக கூறினார்.

இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த தானேஷ்வரன் கடந்த 12-ந் தேதி நாமக்கல்லில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்திற்கு சென்று புதிய மோட்டார் சைக்கிள் வாங்க போவதாக தந்தையிடம் கூறி விட்டு சென்றார். ஆனால் மோட்டார் சைக்கிளை மட்டும் பார்த்து விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்த தானேஷ்வரனை அவரது பெற்றோர் சமாதானம் செய்து பின்னர் மோட்டார் சைக்கிள் வாங்கித் தருவதாக கூறினர்.

விசாரணை

இந்த நிலையில் தானேஷ்வரனுக்கு அவரது சகோதரர் ரகுவரனுக்கு போன் செய்துள்ளார். ஆனால் செல்போனை எடுக்காததால் சந்தேகமடைந்த ரகுவரன் வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது வீடு உள்பக்கம் சாத்தப்பட்டிருந்ததால் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது தானேஷ்வரன் சேலையால் தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கதவை உடைத்து‌ உள்ளே சென்று அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே தானேஷ்வரன் இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story