அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் திடீர் மறியல்


அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் திடீர் மறியல்
x

தா.பழூர் அருகே அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள நாயகனைபிரியாள் கிராமத்தில் உள்ள தெற்குவெலி பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் பகுதிக்கு பிரம்மனர் குளம் பகுதியில் இருந்து செல்லும் சாலை மண் சாலையாக உள்ளது. மழைக்காலங்களில் இந்த சாலையில் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் சேறும் சகதியாக மாறி விடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அப்பகுதி மக்கள் நாயகனைபிரியாள் கிராமத்தில் நால்ரோடு பகுதியில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது தெற்குவெலி பகுதி மக்களின் போக்குவரத்துக்கு பயன்பெற்று வரும் மண்சாலையை தார் சாலையாக அமைக்க வேண்டும். குடிநீர் மற்றும் மின்விளக்கு வசதிகளை செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த தா.பழூர் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், அடிப்படை வசதி கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனு அளிக்குமாறு தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story