தீவனப்புல் வளர்க்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம்


தீவனப்புல் வளர்க்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 12 Nov 2022 6:45 PM GMT (Updated: 12 Nov 2022 6:45 PM GMT)

தீவனப்புல் வளர்க்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க விதை தொகுப்பு மற்றும் புல்கறனைகள் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர்கள் 18-ல் இருந்து 65 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் சம்பந்தப்பட்ட கால்நடை உதவி மருத்துவரிடம் பரிந்துரை பெற்று விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும். ஆதி திராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். ேமலும் பயிற்சி, கையேடுகள் மற்றும் களப்பயிற்சி ஆகியவற்றின் செலவினங்கள் ஒரு பயனாளிக்கு ஏக்கருக்கு ரூ.10,000 என்ற மானிய தொகைக்குட்பட்டு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும். தீவன விதைகள் ஆவின் நிறுவனம், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும். இதில் பயன்பெற விருப்பமுள்ள ஆதிதிராவிடர்கள் https://application.tahdco.com, என்ற இணையதளத்திலும், பழங்குடியினர் https://fast.tahdco.com என்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story