மாவட்ட வன அலுவலக நாற்றங்கால் பண்ணையை பார்வையிட்ட மாணவர்கள்


மாவட்ட வன அலுவலக நாற்றங்கால் பண்ணையை பார்வையிட்ட மாணவர்கள்
x

மாவட்ட வன அலுவலக நாற்றங்கால் பண்ணையை மாணவர்கள் பார்வையிட்டனர்.

கரூர்

தரகம்பட்டி அருகே வையாளிமடை பகுதியில் மாவட்ட வன அலுவலக நாற்றங்கால் பண்ணை உள்ளது. இந்த பண்ணையை தரகம்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 150 மாணவர்கள் பார்வையிட்டனர். அப்போது அவர்களுக்கு மரக்கன்று வளர்ப்பு தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் விதை ஊன்றுதல், களை எடுத்தல், நீர் ஊற்றுதல் போன்ற தகவல்களை வனக்காப்பாளர் சிவரஞ்சனி மாணவர்களுக்கு விளக்கினார். நாற்றங்காலில் உள்ள பல்வேறு வகையான மரக்கன்றுகள், அவற்றின் பயன்கள் குறித்து மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் வேலுச்சாமி எடுத்துரைத்தார். இதற்கான ஏற்பாடுகளை வனவர் சாமியப்பன் செய்திருந்தார்.


Next Story