போதையால் ஏற்படும் ஆபத்துகளை மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்-போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை


போதையால் ஏற்படும் ஆபத்துகளை மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்-போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை
x

போதையால் ஏற்படும் ஆபத்துகளை மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை கூறினார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் (பொறுப்பு) அங்கையற்கண்ணி தலைமையில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், தமிழக அரசின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து போதை பழக்கத்தில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்களை மீட்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தல், குறும்படங்களை திரையிடுதல், போதை பழக்கத்திற்கு எதிராக துண்டு பிரசுரங்கள் வழங்குதல், விழிப்புணர்வு ஊர்வலம் நடத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை பள்ளி, கல்லூரிகளில் நடத்திட வேண்டும், என்றார். போலீஸ் சூப்பிரண்டு மணி பேசுகையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் போலீசார் நேரில் சென்று மாணவர்களிடம் போதையினால் ஏற்படும் ஆபத்துகளை நன்கு அறியும் வண்ணம் எடுத்துரைக்க வேண்டும். மேலும் போதை எடுத்து கொள்பவர்களுக்கு விதிக்கப்படும் அபராதங்கள், தண்டனைகள் மற்றும் வாழ்க்கையை தொலைத்த மாணவர்கள், சிறை சென்ற மாணவர்களின் குடும்பத்தினர்களின் நிலை குறித்து எடுத்துரைக்க வேண்டும். தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்டம், சாரணர் இயக்கம் ஆகிய மாணவர்களுடன் விழிப்புணர்வு ஊர்வலத்தை மேற்கொள்ள வேண்டும், என்றார்.


Next Story