பிளஸ்-2 தேர்வு முடிவுகள் பற்றி கவலைப்படாமல் மாணவ-மாணவிகள் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி


பிளஸ்-2 தேர்வு முடிவுகள் பற்றி கவலைப்படாமல் மாணவ-மாணவிகள் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
x

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் பற்றி கவலைப்படாமல் மாணவ-மாணவிகள் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

திருச்சி

திருவெறும்பூர்:

பேட்டி

திருச்சியை அடுத்த நவல்பட்டில் நேற்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நிருபர்களிடம் கூறியதாவது:-

திராவிட மாடல் அரசு 2 ஆண்டுகளை நிறைவு செய்து 3-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த ஆண்டில் உறுதிமொழி ஆண்டாக கால் பதிக்கிறது. தமிழகம் முழுவதும் 1,222 இடங்களில் சாதனை விளக்க, பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. நாங்கள் அனைத்தும் செய்து முடிக்கவில்லை. செய்ய வேண்டியது நிறைய உள்ளது. சமூக ஆர்வலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரிடம் இருந்தும் குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படுகிறது.

தமிழகத்தில் முதல்-அமைச்சரின் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் முதலாவதாக திருவெறும்பூர் தொகுதிக்கு உள்ளிட்ட பகுதியில் 3.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை புதுப்பிக்கும் பணி தொடங்கப்படுவது எனக்கு பெருமை அளிக்கிறது. இந்த சாலையால் பொதுமக்கள் உள்ளிட்டோர் சிரமத்திற்கு உள்ளாவதாக கூறினார்கள். அதன் அடிப்படையில் தற்போது இந்த பணி தொடங்கப்பட்டுள்ளது. இதேபோல் நெடுஞ்சாலை பணிகளில் ரூ.13 கோடி மதிப்பில் சாலைகள் அமைக்கப்பட உள்ளது.

தன்னம்பிக்கையுடன்...

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு நாளை (இன்று) வெளியாகிறது. மாணவ, மாணவிகள் தேர்வு முடிவுகள் பற்றி கவலைப்படாமல் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு உரிய துறைகளை தேர்வு செய்து படிக்க, நான் முதல்வன் திட்டம் மூலம் அறிந்து பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story