மாணவர்கள் வர்ணம் பூசினர்
மாணவர்கள் வர்ணம் பூசினர்
நாகப்பட்டினம்
வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம் கிழக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் தூய்மை பணி நடைபெற்றது. இந்த நிலையில் பள்ளியின் சுற்றுச்சுவருக்கு மாணவ-மாணவிகள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், ஆசிரியர்கள் ரூ.25 ஆயிரம் செலவு செய்து வர்ணம் பூசினர். இந்த பணியை பள்ளி தலைமை ஆசிரியர் முரளிதரன் தொடங்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோபாலகிருஷ்ணன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவிதா, துணைத் தலைவர் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் வீரத்தங்கம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பள்ளியின் தூய்மைக்காக பெற்றோர்கள், ஆசிரியர்கள் எடுத்த இந்த செயலை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story