பஸ் படிக்கட்டில் தொங்கியவாறு செல்லும் மாணவர்கள்


பஸ் படிக்கட்டில் தொங்கியவாறு செல்லும் மாணவர்கள்
x

பஸ் படிக்கட்டில் தொங்கியவாறு செல்லும் மாணவர்கள்

நாகப்பட்டினம்

நாகூர் அருகே பாலக்காடு கிராமத்தில் பஸ் படிக்கட்டில் மாணவர் தொங்கியவாறு செல்கின்றனர். எனவே கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போதிய பஸ் வசதி இல்லை

நாகூர் அருகே பாலக்காடு கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் நாகூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.

காலையும், மாலையும் அரசு பஸ்சை நம்பியே பயணித்து வரும் மாணவ- மாணவிகளுக்கு போதிய பஸ் வசதி இல்லை. இதன் காரணமாக தினமும் மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

உயிரிழப்பு ஏற்படும் அபாயம்

திருவாரூரில் இருந்து ஆழியூர், புலியூர், பெருங்கடம்பனூர், வைரவன் இருப்பு, பாலக்காடு வழியாக நாகப்பட்டினம் செல்லக்கூடிய ஒரே ஒரு அரசு பஸ்சை நம்பி மட்டுமே நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பயணித்து வருகின்றனர். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருப்பதால் இருக்கையில் அமர இடம் இல்லாமலும், கூட்டம் ெநரிசலில் இடம் இ்ல்லாமலும் பாலக்காடு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்யும் அவலநிலை உள்ளது. அப்படி பயணம் செய்யும் போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்படவும், மாணவர்கள் கீழே விழுந்து உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

கலெக்டருக்கு மனு

எனவே விபத்து ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காலையிலும், மாலையிலும் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக பாலக்காடு கிராம மக்கள் மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ. ஆகியோரை சந்தித்து பாலக்காடுக்கு கூடுதல் பஸ் விட வேண்டும் என கோரிக்கை மனு அளி


Next Story