மாணவ-மாணவிகள் தங்களது தனித்திறமைகளை காட்டலாம்


மாணவ-மாணவிகள் தங்களது தனித்திறமைகளை காட்டலாம்
x

மாணவ-மாணவிகள் தங்களது தனித்திறமைகளை காட்டலாம்

நாகப்பட்டினம்

கல்வி இணை செயல்பாடுகள் குறித்த போட்டி களில் பங்கேற்று மாணவ- மாணவிகள் தங்களது தனித்திறமைகளை காட்டலாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி பேசினார்.

கல்வி இணை செயல்பாடுகள் குறித்த போட்டிகள்

நாகை அருகே பாப்பாக்கோவில் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான கல்வி இணை செயல்பாடுகள் குறித்த போட்டிகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் மணிகண்டன், இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டி ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். போட்டிகளை தொடங்கி வைத்து சுபாஷினி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பள்ளி மாணவ- மாணவிகள் இடையே இலக்கியம், கவின்கலை, சூழலியல் உள்ளிட்டவற்றை ஊக்குவித்து மேம்படுத்த கல்வி இணை செயல்பாடுகள் குறித்த போட்டிகளை சிறப்பாக நடத்த வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் உத்தரவிட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு சுற்றுலா

அதன்படி நாகை மாவட்டத்தில் வாரம் தோறும் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவிகளுக்கு இலக்கிய மன்றம், வினாடி, வினா மன்றம், சிறார் திரைப்படங்கள் திரையிடுதல் உள்ளிட்டவை மூலம் கல்வி இணை செயல்பாடுகள் குறித்த போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

மாணவ- மாணவிகளின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வர கல்வி இணை செயல்பாடுகள் குறித்த போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் மாணவ- மாணவிகள் கலந்துகொண்டு தங்களது தனி திறமைகளை காட்டலாம். முதலில் வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் போட்டிகள் நடத்தப்பட்டு மாநில அளவிலான போட்டிகளுக்கு மாணவ- மாணவிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மாநில அளவில் நடத்தப்படும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், அரசு செலவில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச்செல்லப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த போட்டியில் திருக்குவளை, பன்னாள், கங்களாஞ்சேரி, கீச்சாங்குப்பம், திருமுருகல், கொளப்பாடு உள்ளிட்ட அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள், மாவட்ட கல்வி துணை ஆய்வாளர் ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பாப்பாக்கோவில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராமன் நன்றி கூறினார்.


Next Story