பள்ளி மாணவிகள் 5 பேருக்கு 'திடீர்' வாந்தி-மயக்கம்


பள்ளி மாணவிகள் 5 பேருக்கு திடீர் வாந்தி-மயக்கம்
x

சீர்காழி அருகே பள்ளி மாணவிகள் 5 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

மயிலாடுதுறை

சீர்காழி அருகே பள்ளி மாணவிகள் 5 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புளிச்சக்காடு பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் இந்த ஆண்டு தோட்டமானியம், புளிச்சக்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்த 17 மாணவர்கள் படித்து வருகிறார்கள். 3 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இன்று நண்பகல் 12 மணி அளவில் இந்த பள்ளியில் படித்துக் கொண்டிருந்த தோட்டமானியம் பகுதியை சேர்ந்த மாணவிகள் பவதாரணி, யாழினி, கனிஷ்கா, அனுஷ்கா உள்பட 5 பேருக்கு திடீரென வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் 5 பேரும் சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு 5 மாணவிகளுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸ் பாதுகாப்பு

இந்த நிலையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மீதம் உள்ள மாணவர்களும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. மாணவிகளுக்கு திடீர் வாந்தி-மயக்கம் ஏற்பட்டதையடுத்து சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் ஏராளமானோர் திரண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நகரசபை தலைவர் துர்கா ராஜசேகரன், துணைத்தலைவர் சுப்பராயன், நகரசபை உறுப்பினர்கள் ரமாமணி, பாஸ்கரன் ஆகியோர் சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.

ஆஸ்பத்திரியில் ஏராளமானோர் திரண்டதை அடுத்து சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விசாரணை

மாணவிகளுக்கு திடீரென வாந்தி-மயக்கம் ஏற்பட்டது ஏன்? வீட்டில் வழங்கப்பட்ட உணவில் குறைபாடா? அல்லது குடிநீரில் குறைபாடா? என பல்வேறு கோணங்களில் நகராட்சி சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார் மற்றும் அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story