நீட் தேர்வில் குறைவான மதிப்பெண வந்து விடுமோ என்ற பயத்தில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


நீட் தேர்வில் குறைவான மதிப்பெண வந்து விடுமோ என்ற பயத்தில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x

நாட்டறம்பள்ளி அருகே நீட் தேர்வில் குறைவான மதிப்பெண வந்து விடுமோ என்ற பயத்தில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பத்தூர்

நீட் தேர்வு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி ஒன்றியம் ஜங்கலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளாலனூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவருக்கு ஜீவிதா என்ற மகளும் பரமேஸ்வரன் என்ற மகனும் உண்டு. மகள் ஜீவிதா நீட் தேர்வில் வெற்றி பெற்று சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

மகன் பரமேஸ்வரன் (வயது 17) நாட்டறம்பள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் இந்த ஆண்டு பிளஸ்-2 முடித்து விட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் உள்ள நீட் தேர்வு மையத்தில் பயிற்சி பெற்று கடந்த 7-ந்் தேதி நடைபெற்ற நீட் தேர்வு எழுதி இருந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

நீட் தேர்வு சரியாக எழுதவில்லை. இதனால் மதிப்பெண் குறைவாக வந்து விடும் என்கிற பயத்தில் கடந்த சில நாட்களாக பயத்தில் இருந்து உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் பரமேஸ்வரன் வீட்டு மாடியில் உள்ள அறைக்கு சென்றவர் வெகு நேரமாகியும் கிழே வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் மாடிக்கு சென்று பார்த்தபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மாணவர் பரமேஸ்வரன் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து செந்தில்குமார் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குப் பதிவு செய்து மாணவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story