பயோ மெட்ரிக் எந்திரம் இயங்காததால் பொதுமக்கள் தர்ணா போராட்டம்


பயோ மெட்ரிக் எந்திரம் இயங்காததால் பொதுமக்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 9 Jan 2023 6:45 PM GMT (Updated: 9 Jan 2023 6:46 PM GMT)

தேன்கனிக்கோட்டையில் பயோ மெட்ரிக் எந்திரம் இயங்காததால் ரேஷன் கடை முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டையில் பயோ மெட்ரிக் எந்திரம் இயங்காததால் ரேஷன் கடை முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொங்கல் பரிசு தொகுப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5,59,272 குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்புடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இதையடுத்து குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட ரேஷன் கடைக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி சென்றனர்.

இதேபோல் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு நேற்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது. இதையடுத்து பொதுமக்கள் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்காக காலை முதல் வரிசையில் நின்றனர். அப்போது தேன்கனிக்கோட்டையில் உள்ள ரேஷன் கடையில் பயோ மெட்ரிக் எந்திரம் இயங்கவில்லை.

தர்ணா போராட்டம்

இதனால் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவில்லை. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ரேஷன் கடை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மக்களிடம் கையெழுத்து வாங்கி கொண்டு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கி கொண்டு விற்பனையாளர்கள் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினர்.


Next Story