காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்


காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
x

கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்

நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் காங்கிரஸ் கட்சி இடைக்கால தலைவர் சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறை நடத்தும் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று 2-வது நாளாக கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலை அருகில் போராட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் அக.கிருஷ்ணமூர்த்தி, காசிலிங்கம், முன்னாள் மாவட்ட தலைவர் நாஞ்சில் ஜேசுதுரை, மாவட்ட துணைத்தலைவர் சேகர், நகர தலைவர் லலித் ஆண்டனி, சேவா தளம் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், மாவட்ட துணைத்தலைவர் விவேகானந்தன், வட்டார தலைவர்கள் மாது, நஞ்சுண்டன், தொழிற்சங்க மாவட்ட தலைவர் மைக்கேல், ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் கமலக்கண்ணன், முன்னாள் நகர தலைவர் முபாரக், பிலால், சாம்பல்பட்டி முருகேசன், சக்திவேல், வெங்கடாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் மத்திய அரசை கண்டித்து நிர்வாகிகள் பேசினர்.

தேன்கனிக்கோட்டை

இதேபோன்று அமலாக்கத்துறை மற்றும் மத்திய அரசை கண்டித்து தேன்கனிக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் அறவழி சத்தியாகிரக போராட்டம் நேற்று நடந்தது. மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அப்துர் ரஹ்மான் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்துபேசினார்.

இதில் நகர தலைவர் பால்ராஜ், மாவட்ட விவசாய அணி தலைவர் ஹரீஷ், சம்பங்கி, மாவட்ட மகளிரணி தலைவி சரோஜம்மா, பொருளாளர் மஞ்சுளா, மாவட்ட துணைத்தலைவர் கீர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சாதிக் நன்றி கூறினார்.


Next Story