விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்ஆதார், வாக்காளர் அடையாள அட்டை ஒப்படைக்கும் போராட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்ஆதார், வாக்காளர் அடையாள அட்டை ஒப்படைக்கும் போராட்டம்
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு மாவட்ட நிர்வாகம் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையை கண்டித்து கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் போராட்டம் நடந்தது. கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் மாதேஷ் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் தியாகு, தொகுதி துணை செயலாளர் முனிசந்திரன், ஒன்றிய செயலாளர் ரமேஷ், மாதையன், பாக்யராஜ், சசிகுமார், எடிப்பள்ளி கிருஷ்ணன், தியாகு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இதையொட்டி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பஸ் நிறுத்தத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஊர்வலமாக நீதிமன்றத்தை நோக்கி சென்றனர். இது குறித்து தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், உதவி கலெக்டர் பாபு, தாசில்தார் சம்பத் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கோரிக்கைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையொட்டி 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story