உத்தனப்பள்ளி அருகேலாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்


உத்தனப்பள்ளி அருகேலாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
x
கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை

உத்தனப்பள்ளி அருகே உள்ள தேவசானப்பள்ளி கிராமத்தில் தனியார் கல்குவாரி மற்றும் கிரசர் இயங்கி வருகிறது. குவாரியில் வெடி வைக்கும் போது வீடுகளில் விரிசல் ஏற்படுவதாகவும், கிரசர்களால் விவசாயம் செய்ய முடியவில்லை என்றும் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் குவாரி மற்றும் கிரசர் முன்பு திரண்டு லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் உத்தனப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமுதா மற்றும் போலீசார் விரைந்து சென்று கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு மக்கள் உடன்படவில்லை. இதையடுத்து போலீசார் கிராமமக்களை குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்தி லாரிகளை விடுவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story