தேன்கனிக்கோட்டை அருகேபயிர்களை சேதப்படுத்திய யானைகள்இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் போராட்டம்


தேன்கனிக்கோட்டை அருகேபயிர்களை சேதப்படுத்திய யானைகள்இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் போராட்டம்
x
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை அருகே விவசாய நிலங்களில் புகுந்து யானைகள் பயிர்களை சேதப்படுத்தின. இதனால் கவலை அடைந்த விவசாயிகள் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க கோரி முட்டி போட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பயிர்கள் சேதம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள திம்மசந்திரம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 10-க்கும் மேற்பட்ட யானைகள் நேற்று முன்தினம் இரவு லிங்கதீரனப்பள்ளி கிராமத்திற்குள் புகுந்தன. இந்த யானைகள் அதேபகுதியை சேர்ந்த விவசாயிகள் சந்திரன், சாந்தம்மா, ரவி, சரத் ஆகியோருக்கு சொந்தமான நிலங்களில் சாகுபடி செய்திருந்த தக்காளி, வெள்ளரி, வாழை மரங்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தின.

இந்த நிலையில் நேற்று காலை விவசாயிகள் தோட்டத்திற்கு சென்றனர். அப்போது தக்காளி, வெள்ளரி உள்ளிட்ட பயிர்களை யானைகள் சேதப்படுத்தி இருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இன்னும் ஓரிரு வாரங்களில் அறுவடைக்கு வர இருந்த தக்காளியை யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

போராட்டம்

இதையடுத்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட செயலாளர் கணேஷ்ரெட்டி மற்றும்விவசாயிகள் யானைகளால் சேதமடைந்த பயிர்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க கோரி விவசாய நிலத்தில் முட்டி போட்டு நூதன முறையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கர்நாடக வனப்பகுதியில் இருந்து யானைகள் கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிக்கு வர தொடங்கி விட்டன. இதனால் யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். யானைகள் விவசாய நிலங்களில் புகுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். யானைகளால் சேதமடைந்த தக்காளி, வெள்ளரி, வாழை மரங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றுகூறினர்.


Next Story