சட்டம், ஒழுங்கை பாதுகாக்க கடும் நடவடிக்கை


சட்டம், ஒழுங்கை பாதுகாக்க கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 15 Sep 2022 6:45 PM GMT (Updated: 15 Sep 2022 6:45 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

செல்போன்கள் மீட்பு

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டுகளாக காணாமல் போன செல்போன்கள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த ஒரு ஆண்டில் மாவட்டத்தில் 304 செல்போன்கள் காணாமல் போனது. இதில் ரூ.33 லட்சம் மதிப்புள்ள 207 செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்.

இந்த செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சிவகங்கையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து மீட்கப்பட்ட செல்போன்கள் அதன் உரிமையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், செல்போன் காணாமல் போனால் அது பற்றிய புகார் வந்தால் உடனடியாக மனு ரசீது கொடுத்து சம்பந்தப்பட்டவர்களின் செல்போனை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கை

எனவே செல்போன் எந்த இடத்தில் காணாமல் போனாலும் அந்த விவரத்தை குறிப்பிட்டு அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தால் அவர்கள் அந்த புகாரை பெற்றுக்கொண்டு மனு ரசீது ஒன்று கொடுப்பார்கள். பின்னர் அந்த புகார் சிவகங்கையில் உள்ள சைபர் கிரைம் பிரிவிற்கு அனுப்பப்படும்.

சைபர் கிரைம் போலீசார் அந்த செல்போனின் ஐ.எம்.இ.ஐ. நம்பரை வைத்து காணாமல் போன செல்போனை மீட்க நடவடிக்கை எடுப்பார்கள். மேலும், மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வகுமார், இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார் (சிவகங்கை நகர்), ரமேஷ் (சிவகங்கை தாலுகா) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Next Story