புகையிலை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை


புகையிலை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை
x

கரூர் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கரூர்

தீவிர சோதனை

கரூர் மாவட்டம் முழுவதும் புகையிலை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில் தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த 3 நாட்களாக தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக 51 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 74 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். வாகன விபத்தை தடுக்கும் பொருட்டு கரூர் மாவட்டம் முழுவதும் வாகன சோதனை நடந்தது. இதில், குடிபோதையில் வாகனத்தை இயக்கியதாக வழக்குகள் பதிந்து, 52 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

நடவடிக்கை

கரூர் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story