சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை


சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை
x

சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், மாவட்டம் முழுவதும் சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பனை செய்பவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்திரவிட்டார்.

அதன்படி, தமிழக, ஆந்திர மாநில எல்லையை ஒட்டியுள்ள வாணியம்பாடி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கொரிப்பள்ளம், மாதகடப்பா மற்றும் புதூர் நாடு மலைப்பகுதியில் 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 15 சப்- இன்ஸ்பெக்டர்கள், 38 போலீசார் கொண்ட 3 குழுவினர் மாவட்டம் முழுவதும் நடத்திய மதுவிலக்கு சோதனையில் 1,000 லிட்டர் சாராயம், 12 ஆயிரத்து 50 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கூறுகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. சாராயம் தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு வேட்டை தொடர்ந்து நடைபெறும் என கூறினார்.


Next Story