பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 20 Sep 2022 7:36 PM GMT (Updated: 20 Sep 2022 8:14 PM GMT)

பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விருதுநகர்

பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாவட்ட மாநாடு

விருதுநகரில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட மாநாடு மாவட்ட தலைவர் மகாலட்சுமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தேவா வேலை அறிக்கை சமர்ப்பித்தார். மாவட்ட பொருளாளர் செல்லச்சாமி வரவு, செலவு அறிக்கை வாசித்தார். மாநில துணைத்தலைவர் சிங்காரவேலு மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.

மாநாட்டை விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் ஜோதி லட்சுமி வாழ்த்தி பேசினார். மாநிலச்செயலாளர் செண்பகம் நிறைவுரையாற்றினார். மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பட்டாசு ெதாழில்

10 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ள பட்டாசு தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுச்சூழல் விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும். தீப்பெட்டி தயாரிக்க பயன்படும் மூலப்பொருள்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். அச்சு தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் அனைத்து தூய்மை பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட குழு தேர்வு

பின்னர் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் மகாலட்சுமி, மாவட்ட செயலாளர் தேவா, மாவட்ட பொருளாளர் செல்லச்சாமி, மாவட்ட உதவி தலைவர்கள் திருமலை, கணேசன், சாராள், வெள்ளத்துரை, மாரியப்பன், விஜயகுமார், சோமசுந்தரம், சந்தனம், இணைச்செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், ராமர், சந்திரன், கார்மேகம், பாண்டியன், பிச்சைக்கனி, பரமசிவம், சுரேஷ் குமார், உயிர் காத்தான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் 40 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது. முன்னதாக பாலசுப்ரமணியன் வரவேற்றார். முடிவில் விஜயபாண்டி நன்றி கூறினார்.


Related Tags :
Next Story