பழங்கால ஐம்பொன் சிலை கண்டுபிடிப்பு


பழங்கால ஐம்பொன் சிலை கண்டுபிடிப்பு
x

பழங்கால ஐம்பொன் சிலை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்

கமுதி,

கமுதி அடுத்துள்ள கொத்த பூக்குளம் கிராமத்தில் தேசிய ஊரக வேலை திட்டத்தில் கிராம மக்கள் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வில்லாலுடைய அய்யனார் கோவில் பகுதியில் பூமிக்கு அடியில் ½ அடி உயரம் உள்ள 3 கிலோ எடையில் தவழும் கிருஷ்ணர் சிலை கிடைத்து உள்ளது. இதையடுத்து மண்டல மாணிக்கம் கிராம நிர்வாக அலுவலர் புனிதா, மரக்குளம் குரூப் கிராம நிர்வாக அலுவலர் பாண்டி (பொறுப்பு) ஆகியோருக்கு தகவல் அளிக்கப்பட்டு அந்த சிலை ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கமுதி பகுதியில் உள்ள நகை செய்யும் பொற்கொல்லரிடம் சிலையின் தன்மை குறித்து விசாரணை செய்யப்பட்டது. இதில் அந்த சிலை ஐம்பொன் சிலையாக இருக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அந்த சிலையை கிராம நிர்வாக அலுவலர் கமுதி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் சிக்கந்தர் பபிதாவிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் கிருஷ்ணர் சிலை குறித்து மாவட்ட கலெக்டர், பரமக்குடி ஆர்.டி.ஓ. மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்படும் என கமுதி வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.


Next Story