கலை இலக்கிய பெருமன்ற மாநில மாநாடு


கலை இலக்கிய பெருமன்ற மாநில மாநாடு
x

சாத்தூரில் கலை இலக்கிய பெருமன்ற மாநில மாநாடு நடைபெற்று வருகிறது.

விருதுநகர்

சாத்தூர்,

சாத்தூரில் கலை இலக்கிய பெருமன்ற மாநில மாநாடு நடைபெற்று வருகிறது.

மாநில மாநாடு

சாத்தூர் தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்ற 12-வது மாநில மாநாடு சாத்தூரில் நடைபெற்றது. இந்த மாநாடு 3 தினங்கள் நடைபெறுகிறது.

மாநாட்டின் முதல் நாளான நேற்று கருத்தரங்கம், சொற்பொழிவு, புத்தக கண்காட்சி, தொல்லியல் கண்காட்சி, புகைப்பட கண்காட்சி உள்பட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கண்காட்சியை முனைவர் கணேஷ்ராம் திறந்து வைத்தார். வரவேற்புக்குழுவின் செயலாளர் மருத்துவர் அறம் தலைமை தாங்கினார். மேலும் வரவேற்புக்குழு தலைவர் எம்.ஏ.சி.எஸ். ரவீந்திரன் முன்னிலை உரை நிகழ்த்தினார். தொடக்க நிகழ்ச்சியில் மாநில தலைவர் சொக்கலிங்கம், பொதுச்செயலாளர் காமராசு, பொருளாளர் துணைப் பொதுச்செயலாளர் ஹாமீம் முஸ்தபா, மாநில செயலாளர் கண்மணி ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புத்தகக்கண்காட்சி

இந்த மாநாட்டில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், மாணிக்கம் தாகூர் எம்.பி., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில தலைவர் முத்தரசன், தமிழ்நாடு சிறுபான்மையினர் வாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், ரகுராமன் எம்.எல்.ஏ., முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லிங்கம் மற்றும் அழகிரிசாமி, சாத்தூர் ஊராட்சி ஒன்றிய சேர்மன் நிர்மலா கடற்கரைராஜ், சாத்தூர் நகர்மன்ற தலைவர் குருசாமி, இலங்கை எழுத்தாளர் ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இம்மாநாடு வளாகத்தில் மறைந்த கலைஞர்களின் புகைப்படம் திறப்பு நிகழ்ச்சியும், பல்வேறு வகையான புத்தகக்கண்காட்சி, நாணய கண்காட்சி, ஓவிய கண்காட்சி போன்றவை நடைபெற்றன. மேலும் மாநாட்டு விழாவில் குழந்தைகளின் சிலம்பாட்டம், பறை இசை கலைஞர்களின் பறையாட்டம் போன்றவைகளும் நடைபெற்றது.


Related Tags :
Next Story