ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழைநீர்


ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழைநீர்
x

அருப்புக்கோட்டை அருகே ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அருகே ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

பருத்தி சாகுபடி

அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி, கோபாலபுரம், ராமானுஜபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கோபாலபுரத்தில் இருந்து பாலவநத்தம் செல்லும் சாலையின் இருபுறமும் தங்களது விவசாய நிலங்களில் பருத்தி, சோளம், கம்பு, மொச்சை ஆகியவற்றை சாகுபடி செய்வது வழக்கம்.

ஆதலால் இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் அதிகாலையில் எழுந்து விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது தொடர்ந்து பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து முதற்கட்டமாக நிலத்தை உழுது பயிர்கள் நடும் பணி மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்மழை

விவசாய பணிக்காக விவசாயிகள் மாட்டு வண்டிகள், மோட்டார்சைக்கிள், டிராக்டர் ஆகியவற்றை பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் அருப்புக்கோட்டை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக கோபாலபுரத்தில் இருந்து பாலவநத்தம் செல்லும் பாதையில் உள்ள ெரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது.

இதனால் இந்த சாைல வழியாக விவசாயிகள் சிரமத்துடன் சென்று வருகின்றனர்.

தேங்கி நிற்கும் நீர்

இதுகுறித்து பாளையம்பட்டியை சேர்ந்த தம்பதி சங்கரலிங்கம், விஜயா கூறியதாவது:-

தற்போது இந்த பகுதியில் பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக கோபாலபுரத்தில் இருந்து பாலவநத்தம் செல்லும் பாதையில் உள்ள ெரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது.

இதனால் விவசாய பணிக்கு இந்த சுரங்கப்பாதை வழியாக செல்ல முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. ஒரு சில விவசாயிகள் வேறு வழியின்றி தேங்கி நிற்கும் தண்ணீரில் தான் நடந்து செல்கின்றனர். எனவே தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தவும், மழைநீர் தேங்காமல் வடியவும் நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story