எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நிறைவடைந்ததால் மாணவர்கள் உற்சாகம்


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நிறைவடைந்ததால் மாணவர்கள் உற்சாகம்
x

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நிறைவடைந்ததால் மாணவர்கள் உற்சாகம் அடைந்தனர்.

கரூர்

தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி தொடங்கி கடந்த 3-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. இதேபோல் தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 6-ந் தேதி தொடங்கியது. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை தனித்தேர்வர்கள் உள்பட 12 ஆயிரத்து 855 மாணவ- மாணவிகள் 60 தேர்வு மையங்களில் தேர்வினை எழுதினர். நேற்று கடைசி தேர்வாக சமூக அறிவியல் பாடத்தேர்வு நடந்தது. தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவ- மாணவிகள் உற்சாகம் அடைந்தனர். அவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவினர். மாணவர்கள் ஒருவர் மீது ஒருவர் சட்டையில் மை அடித்து கொண்டனர். தேர்வு முடிந்து விடுமுறை தொடங்கியதையொட்டி மாணவ-மாணவிகள் உற்சாகமாக துள்ளி குதித்தனர். ஒருசில மாணவர்கள் தங்களது நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் சிலர் ஓட்டல்களுக்கு சென்று மதியம் உணவு முடித்து கொண்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.


Next Story