நாய்கள் கடித்து புள்ளி மான் செத்தது


நாய்கள் கடித்து புள்ளி மான் செத்தது
x

நாய்கள் கடித்து புள்ளி மான் செத்தது.

புதுக்கோட்டை

வடகாடு பகுதியில் நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. அப்போது வழி தவறி வந்த ஆண் புள்ளி மான் ஒன்று வெறி நாய்கள் கடித்ததில் கம்பி வேலி மீது மோதி இறந்த நிலையில் கிடந்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், ஆலங்குடி வனச்சரகர் ரவிச்சந்திரன் மற்றும் புள்ளான்விடுதி அரசு கால்நடை மருத்துவர் செல்வராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் புள்ளிமானுக்கு உடற்கூராய்வு செய்யப்பட்டு அதே இடத்தில் புதைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உயிரினங்கள் வசிக்கக்கூடிய அளவில் வனக்காடுகள் இல்லாததால் மான், மயில், முயல், குரங்கு, காடை, கவுதாறி உள்ளிட்ட வன உயிரினங்கள் உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமப்புற பகுதிகளில் தஞ்சம் அடைந்து வருகின்றன. அவ்வாறு வருகையில் இது போன்ற துயர சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதாக, சமூக ஆர்வலர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.


Next Story