கல்வி ஒன்று தான் அழியாத செல்வம் கலெக்டர் ஜானிடாம் வா்கீஸ் பேச்சு


கல்வி ஒன்று தான் அழியாத செல்வம் கலெக்டர் ஜானிடாம் வா்கீஸ் பேச்சு
x
தினத்தந்தி 21 April 2023 6:45 PM GMT (Updated: 21 April 2023 6:45 PM GMT)

கல்வி ஒன்று தான் அழியாத செல்வம் என கலெக்டர் ஜானிடாம் வா்கீஸ் கூறினார்.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்

கல்வி ஒன்று தான் அழியாத செல்வம் என கலெக்டர் ஜானிடாம் வா்கீஸ் கூறினார்.

வழிகாட்டுதல் நிகழ்ச்சி

முதுகுளத்தூர் சோனை மீனாள் கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 11,12-ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கினார்.

ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் அன்னம்மாள், மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் பாண்டி, முதுகுளத்தூர் தாசில்தார் சிவகுமார், பரமக்குடி ஆதிராவிடர் நலத்துறை தாசில்தார் சடையாண்டி, கல்லூரி முதல்வர் கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுகுளத்தூர் ஆதிதிராவிட நலத்துறை தாசில்தார் தென்னரசு வரவேற்றார்.

பெற்றோர் கடமை

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பேசுகையில் இந்தியாவிலேயே. வேற எந்த மாநிலத்திலும் நடக்காத நிகழ்ச்சி தமிழக முதல் அமைச்சர் ஆணைக்கிணங்க இந்த உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 12-ம் வகுப்பு வரை படித்துவிட்டு சூழ்நிலை, பொருளாதார பிரச்சினை, ஆர்வமின்மை போன்ற காரணங்களை கலைந்து குறைந்தபட்ச பட்டப்படிப்பாவது படிக்க வேண்டும் என்பதுதான் இந்நிகழ்வின் நோக்கமாகும். குடும்பத்தில் பல்வேறு சூழ்நிலைகள் பல்வேறு சிரமங்கள் இருக்கத்தான் செய்யும், அதையும் கடந்து குழந்தைகளை தொடர்ந்து கல்வி கற்க வைப்பது பெற்றோர்களின் கடமையாகும்.

கல்வி ஒன்று தான் அழியாத செல்வம், கல்விதான் நம் வாழ்வை மேம்படுத்திக்கொள்ள வழிவகை செய்யும். மாவட்ட நிர்வாகமும் கல்வித்துறையும் மாணவர்களுக்கு தேவையான ஒத்துழைப்பு மற்றும் உதவியை வழங்க உள்ளோம் என்றார். மேலும் மாணவர்கள் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் துரைப்பாண்டியன், ஆதிதிராவிட நலத்துறை வருவாய் ஆய்வாளர் தினேஷ்குமார் உள்பட அரசு அதிகாரிகள் மற்றும் மாணவ,மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story