சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரெயில்கள்


சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரெயில்கள்
x
தினத்தந்தி 5 Sep 2022 8:15 PM GMT (Updated: 5 Sep 2022 8:15 PM GMT)

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

சேலம்

சூரமங்கலம்:-

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக கேரள மாநிலத்திற்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. ஐதராபாத்- திருவனந்தபுரம் சிறப்பு ரெயில் (வண்டி எண் 07119) ஐதராபாத் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று மாலை 6.15 மணிக்கு புறப்பட்டது. இந்த ரெயில் சேலம், கோவை வழியாக இன்று (செவ்வாய்க்கிழமை) திருவனந்தபுரம் சென்றடைகிறது.

இதேபோல் மறுமார்க்கத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து (வண்டி எண் 07120) வருகிற 10-ந் தேதி இரவு 10 மணிக்கு புறப்பட்டு கோவை வழியாக 11 ந் தேதி காலை 9.02 மணிக்கு சேலம் வந்தடைகிறது. பின்னர் 12-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு ஐதராபாத் சென்றடைகிறது.

மைசூர்- திருவனந்தபுரம் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06201) நாளை (புதன்கிழமை) மதியம் 12.15 மணிக்கு மைசூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.25 மணிக்கு சேலம் வந்தடைந்து, பின்னர் மதுரை, திருநெல்வேலி வழியாக 8-ந் தேதி திருவனந்தபுரம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து (வண்டி எண் 06202) நாளை மறுதினம் (வியாழக்கிழமை) திருவனந்தபுரத்தில் இருந்து மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு இரவு 1.35 மணிக்கு சேலம் வந்தடைகிறது. 9-ந் தேதி மைசூர் சென்றடைகிறது என்று சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story