விழுப்புரம்-திருவண்ணாமலை-மயிலாடுதுறை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்


விழுப்புரம்-திருவண்ணாமலை-மயிலாடுதுறை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்
x
தினத்தந்தி 29 Nov 2022 6:45 PM GMT (Updated: 29 Nov 2022 6:46 PM GMT)

கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு விழுப்புரம்- திருவண்ணாமலை-மயிலாடுதுறை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது

விழுப்புரம்

விழுப்புரம்

கார்த்திகை தீப திருநாள்

கார்த்திகை தீபதிருநாளையொட்டி திருவண்ணாமலை கோவிலுக்கு பக்தர்கள் சென்று வர வசதியாக விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே இயக்குகிறது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரெயில்வே அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மயிலாடுதுறை, திருச்சியில் இருந்து

வருகிற 6, 7-ந் தேதிகளில் மயிலாடுதுறையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06690) 10.55 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடைகிறது. இதேபோல் மறுமார்க்கத்தில் திருவண்ணாமலையில் இருந்து பகல் 12.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06691) மாலை 5.40 மணிக்கு மயிலாடுதுறையை சென்றடைகிறது. இந்த ரெயில்கள் விழுப்புரம், வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்றுசெல்லும்.

இதேபோல் 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை திருச்சியில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06890) நள்ளிரவு 12.40 மணிக்கு வேலூர் கண்டோன்மெண்டை சென்றடைகிறது. இதேபோல் மறுமார்க்கத்தில் வேலூர் கண்டோன்மெண்டில் இருந்து நள்ளிரவு 1.30 மணியளவில் புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06889) மறுநாள் காலை 10.45 மணிக்கு திருச்சியை சென்றடைகிறது. இந்த ரெயில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விழுப்புரம், வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, திருக்கோவிலூர், திருவண்ணாமலை, போளூர், ஆரணி சாலை ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

புதுச்சேரி-திருவண்ணாமலை

மேலும் 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை புதுச்சேரியில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06436) இரவு 10.30 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 3.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06737) காலை 6.20 மணிக்கு புதுச்சேரியை சென்றடைகிறது. இந்த ரெயில்கள் விழுப்புரம், வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய இடங்களில் நின்றுசெல்லும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story