புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
கரூர்
நொய்யல் அருகே வேட்டமங்கலம் பகுதியில் உள்ள தனியார் கலை-அறிவியல் கல்லூரி வளாகத்தில் தற்காலிக பயிற்சி மையம் தொடங்கப்பட்டு திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 140 தீயணைப்பு வீரர்களுக்கு கரூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அலுவலர் ஜெகதீஷ் தலைமையிலான குழுவினர் பல்வேறு வகையான பயிற்சி அளித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மத்திய காவல் படை (சி.ஆர்.பி.எப்.) ஓய்வு பெற்ற பயிற்சியாளர் மரியம் மைக்கேல் கலந்து கொண்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு கயிற்றை கட்டி கயிற்றின் மீது படுத்து ஊர்ந்து செல்வது போன்ற பயிற்சியையும், விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த பயிற்சியையும் அளித்தார்.
Related Tags :
Next Story