சுற்றுலா தலங்களில் சுற்றுச்சூழலை பாதுகாக்க சிறப்பு திட்டம்-அமைச்சர் மெய்யநாதன் தகவல்


சுற்றுலா தலங்களில் சுற்றுச்சூழலை பாதுகாக்க சிறப்பு திட்டம்-அமைச்சர் மெய்யநாதன் தகவல்
x

சுற்றுலா தலங்களில் சுற்றுச்சூழலை பாதுகாக்க சிறப்பு திட்டம் உள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:- நாகை மாவட்டத்தில் சி.பி.சி.எல். நிறுவனத்தில் குழாய் உடைப்பு தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. நிரந்தர தீர்வு காண்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எதிர்காலத்தில் தமிழகத்தில் கால நிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இந்த ஆண்டு வெப்ப அலை அதிகமாக வீச உள்ளது என்ற எச்சரிக்கையை தந்துள்ளது. அந்த வெப்ப அலை தமிழகத்தில் ஏற்பட்டால் அதை எவ்வாறு கையாளுவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளன.

ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, பிச்சாவரம், குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுச்சூழலை அதன் மீள் தன்மையில் இருந்து பாதுகாப்பது என்ற சிறப்பு திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்படுகிறது அதன் பிறகு தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story