நாகூரில், பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
ரமலான் நோன்பு தொடங்கியதையொட்டி நாகூரில் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.
நாகூர்:
ரமலான் நோன்பு தொடங்கியதையொட்டி நாகூரில் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.
ரமலான் நோன்பு
இஸ்லாமியர்களின் 5 கடமைகளின் ஒன்றான புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது மிகவும் சிறப்பு உடையதாகும். இந்த ரமலான் மாதத்தில் பிறை தென்பட்ட நாளில் இருந்து
30 நாட்களுக்கு அதிகாலை 4.30 மணி முதல் மாலை 6.30 வரை இஸ்லாமிய ஆண், பெண், குழந்தைகள் வரை நோன்பு கடைபிடிப்பது வழக்கம்.
இந்த நோன்பு நாட்களில் இரவில் சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் ஈடுபடுவார்கள். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ரமலான் பிறை தென்பட்டதால் ரமலான் நோன்பு தொடங்கப்படுவதாக அரசு தலைமை காஜி சலாவுதீன் அறிவித்தார்.
சிறப்பு தொழுகை
இதை தொடர்ந்து .இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு கடைபிடிக்க தொடங்கினர். நோன்பு காலம் தொடங்கியதையொட்டி நாகை மாவட்டம் நாகூர் தர்காவில் உள்ள நவாப் ஜாமியா பள்ளிவாசல் மற்றும் காதிரிய்யா மதரசா பள்ளிவாசல் உள்பட பல்வேறு பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.