முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை


முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
x

ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கரூர்

ஆடி மாத கிருத்திகை

ஆடி மாத கிருத்திகையையொட்டி குளித்தலை தண்டாயுதபாணி முருகன் கோவிலில் சுவாமிக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர்கள் கொண்டு சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

வேலாயுதம்பாளையம்

வேலாயுதம்பாளையம் அருகே பாலமலை முருகன் கோவிலுக்கு திரளான பக்தர்கள், பால்குடம், காவடி எடுத்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். பின்னர் சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

நொய்யல்

புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல் நன்செய் புகழூர் அக்ரஹாரம், பாலமலை பகுதிகளில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.


Related Tags :
Next Story