தோரணமலை முருகன் கோவிலில் சிறப்பு பூஜை
தோரணமலை முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
பாவூர்சத்திரம்:
தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவிலில் விவசாயம் செழிக்க வேண்டி வருண கலச பூஜை நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் பக்தர்கள் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து கிரக குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து சப்த கன்னியர்கள், விநாயகர் மற்றும் தெய்வங்களுக்கும், மலை அடிவாரத்தில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், வருண கலச பூஜை நடைபெற்றது. மேலும் மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன் மற்றும் முருகருக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடைபெற்றது. மேலும் தோரணமலை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த மடத்தூர், சிவநாடானூர் அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு வாசிப்பு திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன் கல்வி, பொது அறிவு தொடர்பான புத்தகங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் தலைமையில் செய்திருந்தனர்.