சக்திமலை சிவன் கோவிலில் சிறப்பு பூஜை


சக்திமலை சிவன் கோவிலில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 4 Jan 2023 6:45 PM GMT (Updated: 4 Jan 2023 6:45 PM GMT)

பிரதோஷத்தையொட்டி சக்திமலை சிவன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி சக்தி மலையில் முருகன் கோவில் வளாகத்தில் உள்ள சிவன் கோவிலில் நேற்று பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. மாலை 4.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை லிங்கேஸ்வரருக்கு பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் அபிஷேக பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

மேலும் சிவபெருமானின் வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு, எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அருகம்புல் சாற்றி மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் கோத்தகிரி கடை வீதி மாரியம்மன் கோவிலில் உள்ள லிங்கேஸ்வரருக்கும் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. பிரதோஷ நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து கலந்துகொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர்.



Next Story