திறன் மேம்பாட்டு பயிற்சி


திறன் மேம்பாட்டு பயிற்சி
x
தினத்தந்தி 10 Sep 2023 9:15 PM GMT (Updated: 10 Sep 2023 9:15 PM GMT)

ஆனைமலையில் விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் பெங்களூருவில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியும், புதிய பயிர் தொழில்நுட்ப பயிற்சியும் வழங்கப்பட்டது. இதற்கு ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் தலைமை தாங்கினார். ஆராய்ச்சி நிலைய முனைவர் சங்கர் மற்றும் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். மேலும் புதிய தொழில் நுட்பம் குறித்து பேசினர். அப்போது அவர்கள் கூறுகையில், தென்னை மரங்களுக்கு இடையே ஊடு பயிராக பயிரிட இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் மட்டுமே உள்ள சங்கரா மற்றும் சிந்து என்ற புதிய வகை பலா கன்று அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது என்றனர். பின்னர் அனைத்து விவசாயிகளுக்கும் தலா ஒரு பலா கன்று இலவசமாக வழங்கப்பட்டது. இதில் தோட்டக்கலை துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story