சிறுமிக்கு பாலியல் தொல்லை: கட்டிட தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை சேலம் கோர்ட்டு தீர்ப்பு


சிறுமிக்கு பாலியல் தொல்லை:  கட்டிட தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை  சேலம் கோர்ட்டு தீர்ப்பு
x

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கட்டிட தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

சேலம்

சேலம்

கட்டிட தொழிலாளி

மேச்சேரி அருகே உள்ள கொம்பம்புதூர் பகுதியை சேர்ந்தவர் மதியழகன் (வயது 57), கட்டிட தொழிலாளி. கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ந் தேதி, 12 வயதுடைய சிறுமி, தனது வீட்டில் இருந்து தோழியை பார்ப்பதற்காக நடந்து சென்று கொண்டிருந்தாள்.

அப்போது அந்த வழியாக வந்த மதியழகன் அந்த சிறுமியை வழிமறித்து பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தாள். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மேட்டூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

7 ஆண்டுகள் சிறை

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மதியழகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிவடைந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அதாவது, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக மதியழகனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு அளித்தார்.


Related Tags :
Next Story