சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை


சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை
x
தினத்தந்தி 3 March 2023 6:45 PM GMT (Updated: 3 March 2023 6:45 PM GMT)

சூளகிரி ஒன்றியம் அகரம் கிராமத்தில் சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை நடந்தது.

கிருஷ்ணகிரி

சூளகிரி,

சூளகிரி ஒன்றியம் கொம்மேப்பள்ளி ஊராட்சி அகரம் கிராமத்தில் 15-வது நிதி திட்டத்தின் கீழ் ரூ.11 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் மற்றும் ரூ.12.26 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது. இதற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் முனிரத்னா முனிராஜ் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் கோபாலகிருஷ்ணன், கொம்மேப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜ், அழகேசன், ஜானகியம்மா சின்னசாமி, ஊராட்சி மன்ற துணை தலைவர் முருகன், முன்னாள் கவுன்சிலர் வெங்கடேஷ், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story