சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்


சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்
x

வத்திராயிருப்பு அருகே சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரினால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு அருகே சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரினால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

சாலையில் கழிவுநீர்

வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரம் ஊராட்சி அண்ணாநகர் 1-வது வார்டில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த வார்டில் உள்ள வாருகால் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் சாலையில் தேங்கி நிற்கிறது.

இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயநிலையும் நிலவுகிறது. இந்த கழிவுநீரை தாண்டி தான் அப்பகுதியில் உள்ள மக்கள், குழந்தைகள் செல்கின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள சாலையும் சேதமடைந்து காணப்படுகிறது.

தொற்றுநோய்கள்

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் உள்ள வாருகால் சேதமடைந்து இருப்பதால் கழிவுநீர் சாலையில் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்களின் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

இப்பகுதியில் உள்ள சாலையும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே கழிவுநீர் கால்வாயை சீரமைப்பதுடன், சேதமடைந்த சாலைைய சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story