குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீர்


குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீர்
x

வத்திராயிருப்பில் குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பில் குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

கழிவுநீர் கால்வாய்

வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட மகாராஜபுரம் ஊராட்சி 1-வது வார்டு சுந்தரவிநாயகபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள வீடுகளின் கழிவுநீர் செல்வதற்கு கழிவுநீர் கால்வாய் இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரானது குடியிருப்பு பகுதிகளுக்குள் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது.

இதனால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவது மட்டுமல்லாமல், கொசுத் தொல்லையும் அதிகமாக உள்ளது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

குற்றச்சாட்டு

தற்போது வத்திராயிருப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மழைநீரும், கழிவுநீருடன் கலந்து தேங்கி நிற்கிறது.

இதனால் சுகாதார கேடு ஏற்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதேபோல இந்த பகுதியில் போதுமான தெருவிளக்கு இல்லாததால் இப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர்.

ஆதலால் மேற்கண்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தேவையான கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story