கரூர் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் சாலையில் செல்லும் கழிவுநீர்


கரூர் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் சாலையில் செல்லும் கழிவுநீர்
x

கரூர் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் சாலையில் செல்லும் கழிவுநீர் குறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர்

கரூர் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள சாலையில் அண்ணாநகர் சந்திப்பில் கழிவுநீர் வாய்க்கால் உள்ளது. இந்த கழிவுநீர் வாய்க்காலில் இருந்து கழிவுநீர் நிரம்பி சின்ன ஆண்டாங்கோவில் சாலையில் செல்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். மேலும் இந்த சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் இந்த கழிவுநீர் துர்நாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த கழிவுநீரால் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே இந்த கழிவுநீர் வாய்க்காலை சுத்தம் செய்து, கழிவுநீர் சாலையில் செல்லாத வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story