கோவில் குளத்தில் கழிவுநீர் கலக்கும் அவலம்


கோவில் குளத்தில் கழிவுநீர் கலக்கும் அவலம்
x
தினத்தந்தி 13 July 2023 5:19 PM GMT (Updated: 15 July 2023 10:43 AM GMT)

ரெண்டாடி கிராமத்தில்கோவில் குளத்தில் கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த ரெண்டாடி கிராமத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த வீடுகளில் இருந்து தினந்தோறும் பயன்படுத்தப்பட்டு வெளியேற்றப்படும் கழிவுநீர் கால்வாய்கள் மூலம் பழமை வாய்ந்த சிவன் கோவில் குளத்தில் தேங்கும் வகையில் கழிவுநீர் கால்வாயை ஊராட்சி நிர்வாகம் அமைத்துள்ளனர். தற்போது இந்த குளம் முழுவதும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த சிவன் கோவில் குளம் உள்ளது. திருவிழா காலங்களில் சுவாமி தீர்த்தவாரி மற்றும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். கடந்த 25 ஆண்டுக்கு முன்புவரை குடிநீர் குளமாக இருந்தது. தற்போது குளத்துடன் இணைத்துள்ளனர். இதனால் குளம் முழுவதும் கழிவுநீர் நிரம்பி துர்நாற்றம் வீசி வருகிறது. மழைநேரங்களில் மழைநீர் மற்றும் கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் தெருக்களில் தேங்கி நடந்து செல்லமுடியாத அளவிற்கு சிரமாமக உள்ளதாக ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உரியநடவடிக்க வேண்டும் என்றனர்.


Next Story