குடியிருப்புக்குள் கழிவுநீர் புகுந்தது


குடியிருப்புக்குள் கழிவுநீர் புகுந்தது
x

சிவகாசியில் கழிவுநீர் கால்வாயை ஆக்கிரமித்து கோரைபுற்கள் வளர்ந்து உள்ளதால் குடியிருப்புக்குள் கழிவுநீர் புகுந்தது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசியில் கழிவுநீர் கால்வாயை ஆக்கிரமித்து கோரைபுற்கள் வளர்ந்து உள்ளதால் குடியிருப்புக்குள் கழிவுநீர் புகுந்தது.

கழிவுநீர்

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு பகுதியில் கழிவுநீர் ஓடை உள்ளது. மண்டலம்-1, மண்டலம்-2 ஆகியவைகளுக்கு உட்பட்ட சுமார் 15 வார்டுகளில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் இந்த ஓடையின் வழியாக உறிஞ்சுகுளத்துக்கு செல்கிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கழிவுநீர் ஓடை தூர்வாரப்பட்டது. அதன் பின்னர் இந்த ஓடையை தூர்வாரவில்லை. இதனால் கழிவுநீர் ஓடையில் மண்மேவி, கழிவுநீர் செல்ல முடியாத அளவுக்கு உள்ளது. மேலும் ஓடை தெரியாத அளவிற்கு கோரை புற்கள் வளர்ந்துள்ளன. ஆதலால் கழிவுநீர் அதே பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் செல்கிறது.

பெரும் சேதம்

அதேபோல் இந்த கழிவுநீர் ஓடையின் வழியாக பாம்பு உள்ளிட்ட விஷஜந்துக்களும் குடியிருப்புகளுக்குள் செல்வதாக கூறப்படுகிறது. இந்த கழிவுநீர் ஓடையை தற்போது தூர்வாரவில்லை என்றால் அடுத்து வரும் மழைக்காலத்தில் மழைநீர் மற்றும் கழிவுநீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி கவுன்சிலர் செல்வத்திடம் கேட்ட போது, கடந்த 1 வருடத்திற்கு மேலாக இந்த கழிவுநீர் ஓடையை தூர்வார வேண்டும் என்று கோரிக்கை வைத்து பலமுறை மன்ற கூட்டத்தில் பேசி உள்ளேன். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை பேசியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதே நிலை நீடித்தால் மழைக்காலத்தில் இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீர் செல்லும். அதற்கு முன்னர் தூர்வார வேண்டும் என்றார்.


Next Story