மக்கள் நீதிமன்றம் மூலம் வழக்குகளுக்கு தீர்வு - ரூ.32½ கோடி இழப்பீடு வழங்கப்பட்டது


மக்கள் நீதிமன்றம் மூலம் வழக்குகளுக்கு தீர்வு - ரூ.32½ கோடி இழப்பீடு வழங்கப்பட்டது
x

மதுரை ஐகோர்ட்டு, மதுரை மாவட்ட கோர்ட்டில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.32½ கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.

மதுரை


மதுரை ஐகோர்ட்டு, மதுரை மாவட்ட கோர்ட்டில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.32½ கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.

மக்கள் நீதிமன்றம்

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஸ்ரீமதி, விஜயகுமார், ராமகிருஷ்ணன், கோவிந்தராஜ், திலகவதி, வடமலை ஆகியோர் தலைமையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இந்த 5 அமர்வுகளில் மொத்தம் 456 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 18 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு ரூ.4 கோடியே 41 லட்சத்து 94 ஆயிரத்து 478 நிவாரணமாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஐகோர்ட்டு சட்டப்பணிகள் குழு பொறுப்பு அலுவலர் பதிவாளர் (நீதித்துறை) வெங்கடவரதன் செய்திருந்தார்.

மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் மதுரை மாவட்ட கோர்ட்டில் நடந்த சமரச தீர்வு சிறப்பு முகாமுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி சிவகடாட்சம் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட அளவில் 26 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு மதுரை, உசிலம்பட்டி, மேலூர், திருமங்கலம், வாடிப்பட்டி ஆகிய கோர்ட்டுகளில் விசாரணை நடத்தப்பட்டன. இந்த அமர்வுகளில் மாவட்ட நீதிபதிகள் நாகராஜன், அனுராதா, ரோகிணி மற்றும் சார்பு நீதிபதிகள் அகிலா தேவி, பால்பாண்டியன், முருகன், காமராஜ் மற்றும் மாஜிஸ்திரேட்டுகள், சிவில் நீதிபதிகள் கலந்து கொண்டனர்.

வழக்குகளுக்கு தீர்வு

இதற்கான ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும் சார்பு நீதிபதியுமான ராஜமகேஷ் செய்திருந்தார். இதில் 11,716 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு 11,538 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. 179 மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. 19 குடும்ப நல வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இந்த வழக்குகளின் மூலம் ரூ.28 கோடியே 23 லட்சத்து 78 ஆயிரத்து 252 நிவாரணமாக வழங்கப்பட்டது. அதன்படி, மதுரை ஐகோர்ட்டு மற்றும் மாவட்ட கோர்ட்டில் நடந்த இந்த சமரசத்தீர்வு சிறப்பு முகாமில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.32 கோடியே 65 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.


Next Story