கருத்தரங்கம்


கருத்தரங்கம்
x

பனை மரம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

விருதுநகர்

சிவகாசி,

தமிழ்நாடு பனைமரத்தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு, சாத்தூர் பி.எஸ்.என்.எல். கல்லூரி ஆகியவை இணைந்து பனை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கும், பனை தொழிலாளர் மேம்பாட்டுக்கும் ரூ.17 கோடி நிதி ஒதுக்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழாவும், பனை மரங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில தலைவர் தாமோதிரன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரி வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு அரசு பனைமரத்தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் கலந்து கொண்டு கூறியதாவது:-

பனை தொழிலாளர்கள் நல வாரியத்தில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை சேர்த்துள்ளோம். தமிழ்நாடு முழுவதும் சுமார் 1 கோடி பனை மரக்கன்றுகளை நட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா விரைவில் நடக்க இருக்கிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார் என்றார். இதில் சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன், கிருஷ்ணசாமி கல்விக்குழும தலைவர் ராஜூ, தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு கவுரவ தலைவர் சுபத்ராசெல்லத்துரை, சாத்தூர் யூனியன் தலைவர் நிர்மலாகடற்கரை, வேளாண்மை இணை இயக்குனர் பத்மாவதி, காளிதாஸ், மைவிழிச்செல்வி, ராஜ்குமார், தங்கலட்சுமி, சந்திரசேகர், மகேஸ்வரன், பத்மினி, சுந்தரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நாட்டு நலப்பணி திட்ட ஆசிரியர் ஜெய்கணேஷ் நன்றி கூறினார்.



Next Story