உலக மரபு நாள் விழா கருத்தரங்கு


உலக மரபு நாள் விழா கருத்தரங்கு
x
தினத்தந்தி 21 April 2023 6:45 PM GMT (Updated: 21 April 2023 6:47 PM GMT)

சிவகங்கை அரசு அருங்காட்சியகம், சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரி, சிவகங்கை தொல்நடைக் குழு இணைந்து உலக மரபு நாள் விழாவை முன்னிட்டு ஒரு நாள் கருத்தரங்கை நடத்தின.

சிவகங்கை

சிவகங்கை அரசு அருங்காட்சியகம், சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரி, சிவகங்கை தொல்நடைக் குழு இணைந்து உலக மரபு நாள் விழாவை முன்னிட்டு ஒரு நாள் கருத்தரங்கை நடத்தின. கல்லூரி முதல்வர் கண்ணன் தலைமை தாங்கினார். வரலாற்று துறை தலைவர் (பொறுப்பு) வெண்ணிலா வரவேற்று பேசினார்.

தொன்மை போற்றுதல் குறித்து கருத்தரங்கு நடைபெற்றது. மதுரை தொல்லியல் அலுவலர் பா.ஆசைத்தம்பி, அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் தி.பக்கிரிசாமி, சிவகங்கை தொல்நடை குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா, செயற்குழு உறுப்பினர்கள் வித்யா கணபதி, செய்யது இப்ராகிம், பேராசிரியர் து.முனீஸ்வரன், தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன், தலைவர் சுந்தர்ராஜன், செயலர் நரசிம்மன், உறுப்பினர்கள் ஆறுமுகம், சரவணன், இந்திரா, சிவகங்கை தமிழ் சங்கத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் காசி, ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அரசு மகளிர் கலைக்கல்லூரி பேராசிரியர்கள் குமரமுருகன், சுரேஷ், அஸ்வத்தாமன், வாஹினி, ஜெயஈஸ்வரி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழாவில் கலந்துகொண்டோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாணவி கோகுல சுந்தரி நன்றி கூறினார்.


Next Story